மாவட்ட செய்திகள்

படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.2¼ லட்சம் திருட்டு

படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.2¼ லட்சம் திருடப்பட்டது.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நீலமங்கலம் முப்பாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). தச்சுத்தொழிலாளி. இவர் தன்னுடைய மகனின் திருமணத்தையொட்டி அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றார்.

இந்த நிலையில் கண்ணனின் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கண்ணன் உடனடியாக புறப்பட்டு வீட்டுக்கு வந்தார்.

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து கண்ணன் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை