மாவட்ட செய்திகள்

8 ஆயிரம் புதிய போலீஸ் பணியிடங்கள்; துணை முதல்-மந்திரி அஜித்பவார் தகவல்

அவுரங்காபாத்தில் உள்ள மண்டல போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 8 மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்துக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய போலீஸ் துறையில் விரைவில், புதிதாக 8 ஆயிரம் போலீஸ் பணியிடங்கள் உருவாக்கப்படும். அவசரகால துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு முடிவு செய்து உள்ளது.

நாட்டின் பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை ஆகிய பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பணவீக்கமும் அதிகரித்து உள்ளது. எனவே முதலீட்டாளர்கள் நாட்டில் தங்களது பணத்தை முதலீடு செய்வதை மத்திய நிதி மந்திரி உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்