மாவட்ட செய்திகள்

ரஜினி மக்கள் மன்றத்தின் 9 மாவட்ட இளைஞர், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

திருச்சியில் ரஜினி மக்கள் மன்றத்தின் 9 மாவட்ட இளைஞர், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மாநில அமைப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

தினத்தந்தி

திருச்சி,

ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஏற்கனவே சென்னை, கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்து உள்ளது. நேற்று திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் திருச்சி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்பு செயலாளர் இளவரசன் தலைமை தாங்கினார்.

இளைஞர் அணி மாநில செயலாளர் சாமுவேல் சர்ச்சில், மகளிர் அணி மாநில செயலாளர் காயத்ரி துரைசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். திருச்சி மாவட்ட செயலாளர் கலீல், துணை செயலாளர் சுதர்சன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தமீம், இணை செயலாளர் சேதுராமன், மகளிர் அணி செயலாளர் சுஜாபாய் உள்பட அனைத்து அணி நிர்வாகிகள் திருச்சி உள்பட 9 மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் எந்த நேரம் வந்தாலும் அதனை சந்திக்கும் வகையில் வாக்குச்சாவடி வாரியாக தேர்தல் பணியாற்றுவதற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்