மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 92 பேர் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கைது செய்யக்கோரி திருப்பூர், அவினாசியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

அகில பாரத இந்து மகா சபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை பெரியார் காலனியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வல்லபை பாலா தலைமை தாங்கினார். இந்து பெண்களை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கைது செய்து, அவருடைய எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட அமைப்பாளர் கருப்பையா, பொதுச் செயலாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போலீசார் அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அவினாசி

இதே கோரிக்கையை வலியுறுத்தி சிவசேனா கட்சி சார்பில் அவினாசி புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிவசேனா கட்சி மாவட்ட பொதுசெயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக 27 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை