மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்கிறார்

அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்கிறார்.

திருப்பூர்,

அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்கும் விழா இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு பல்லடம் அருகே 63.வேலம்பாளையத்தில் உள்ள கந்தசாமி கவுண்டர் ராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

விழாவுக்கு கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. (பல்லடம் தொகுதி) தலைமை தாங்குகிறார். மாநில அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலை வகிக்கிறார். விஜயகுமார் எம்.எல்.ஏ. (திருப்பூர் வடக்கு தொகுதி), முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், குடிமங்கலம் ஒன்றிய குழு தலைவர் சுகந்தி முரளி, முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

பொறுப்பேற்பு

விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று சிறப்புரை ஆற்றுகிறார். இதில் உடுமலை, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க. மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கட்சியின் முன்னோடிகள் திரளாக கலந்துகொள்ள உள்ளனர்.

விழா நடக்கும் மண்டபத்தில் கொரோனா தடுப்பு வழி முறைகளை கடைபிடித்து இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. அனைவரும் முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மண்டபத்தின் முன் பகுதியில் கிருமிநாசினி வைக்கப்பட்டு அனைவரும் கைகளை சுத்தம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை