நேற்று அதிகாலை இந்த தொழிற்சாலையில் பழைய டயர்களை தூளாக்கி அவற்றை சேமிப்பு குடோனில் இருந்து அப்புறப்படுத்தும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. டயர்கள் என்பதால் அந்த பகுதியே கரும்புகை மூட்டமாக மாறியது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 7 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.