மாவட்ட செய்திகள்

காதல் திருமணத்துக்கு தந்தை எதிர்ப்பு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் திருமணத்துக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் மனம் உடைந்த இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவருடைய மனைவி இறந்து விட்டார். தனது ஒரே மகளான ரேணுகாதேவியுடன் (வயது 19) வசித்து வந்தார்.

ரேணுகாதேவி, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தனது தந்தையிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் மகளின் காதல் திருமணத்துக்கு சுப்பிரமணி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மனம் உடைந்த ரேணுகாதேவி, நேற்று முன்தினம் இரவு அவரது தந்தை வீட்டில் இல்லாதநேரத்தில், தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வெளியே சென்று இருந்த சுப்பிரமணி, வீட்டுக்கு வந்தபோது, தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீசார், ரேணுகாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்