செம்பட்டி:
செம்பட்டி அருகே உள்ள போடிக்காமன்வாடியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 18). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று செம்பட்டி அருகே பாளையங்கோட்டையில் ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வைத்திருந்த மின்மோட்டாரை இயக்கியபோது, அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.