மாவட்ட செய்திகள்

குன்றத்தூரில் சிறுமியிடம் சில்மிஷம்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

குன்றத்தூரில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டின் வெளியே இருந்துள்ளார். அப்போது பாலசந்திரன் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமி சத்தம் போடவே கீழே கிடந்த கல்லை எடுத்து சிறுமியை தாக்கி விட்டு வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற பாலசந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்