மாவட்ட செய்திகள்

புழல் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; மீன் வியாபாரி சாவு - மனைவி கண் முன்னே பலியான பரிதாபம்

புழல் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில், மனைவி கண் முன்னே மீன் வியாபாரி பரிதாபமாக செத்தார்.

செங்குன்றம்,

சென்னை மதுரவாயல் ஏரிக்கரை காந்தி தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 56). இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி தங்கம் (50). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் காவாங்கரை மீன் மார்க்கெட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, மாதவரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக பலமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த கருப்பசாமி தூக்கி வீசப்பட்டார். இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த அவர், உயிருக்கு போராடிய நிலையில் தவித்தார்.

இதையடுத்து அவரை யாரும் காப்பாற்ற வராத நிலையில், மனைவி கண் முன்னே கருப்பசாமி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த தங்கத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்