மாவட்ட செய்திகள்

மொபட்டில் இருந்து தவறி விழுந்த நிலையில் விபத்து: கார் சக்கரத்தில் சிக்கி போலீஸ்காரர் பலி

மொபட்டில் இருந்து தவறி விழுந்த போலீஸ்காரர் மீது கார் ஏறி இறங்கியதில் பரிதாபமாக பலியானார்.

தினத்தந்தி

போலீஸ்காரர்

சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகர் பகுதியை சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் தனபால். இவரது மகன் மனோஜ்குமார் (வயது 24). போலீஸ்காரரான இவர், ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து மனோஜ்குமார், தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, திடீரென நிலை தடுமாறி மொபட்டில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். அப்போது அங்கு வேகமாக வந்து கொண்டிருந்த கார், மனோஜ்குமாரின் தலை மீது ஏறி இறங்கியது.

சாவு

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மனோஜ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காரை ஓட்டி வந்த டிரைவர் திருஞானசம்பந்தம் (47) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு