திண்டுக்கல்,
மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நேற்று திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே கொண்டாடப்பட்டது. முன்னதாக வெள்ளைவிநாயகர் கோவில் முன்பு திரண்ட அ.தி.மு.க.வினர், மாநகராட்சி சாலை வழியாக ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணை தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.