பழனி:
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பழனி வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் ஆளும் கட்சியினர் நடத்திய தாக்குதல் கண்டனத்துக்கு உரியது. சென்னையில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது.
மத்திய, மாநில அரசு வழங்க உள்ள நிதி, பொருள் உதவி இலங்கை மக்களுக்கு போய் சேர வேண்டுமே தவிர ஆட்சியாளர்களுக்கு அல்ல.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடர் என்பது வெற்று கூட்டத்தொடர். இந்து மத கடவுள்களை இழிவுபடுத்தும் யூடியூப் புரூட்டர்ஸ் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரிவினை வாதிகளை ஆதரிக்கும் கட்சியாக தி.மு.க. உள்ளது. ஆதீனங்களுக்கு அரசு இடையூறு கொடுக்க கூடாது. அவர்களுடன் இணைந்து திருப்பணி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.