பெங்களூரு,
விஸ்மய படத்துக்கான படப்பிடிப்பு நடந்த போது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ மூலம் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கப்பன்பார்க் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடிகர் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, நடிகை சுருதி ஹரிகரன் சமூக வலைத்தளங்களில் நடிகர் அர்ஜூன் பற்றி அவதூறான கருத்துகளை பதிவிட்டு அவருடைய புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக சைபர் கிரைம் போலீசில் நடிகர் அர்ஜூன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் நடிகை சுருதி ஹரிகரன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தன்மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக சைபர்கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் அந்த புகாரின் பேரில் தன்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி கர்நாடக ஐகோர்ட்டில் நடிகை சுருதி ஹரிகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு மீது இன்று (புதன்கிழமை) விசாரணை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.