மாவட்ட செய்திகள்

மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டுக்கல் நகர்க்குழு சார்பில் மகாத்மாகாந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திண்டுக்கல்:

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டுக்கல் நகர்க்குழு சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பழனி சாலையில் உள்ள காந்திஜி நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சங்க துணை தலைவர் ஜெகன் தலைமை தாங்கி பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மதசார்பின்மை, மக்கள் ஒற்றுமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி, நகர்குழு செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மராட்டியம்: 400 மீட்டர் பயணிக்க அமெரிக்க சுற்றுலா பயணியிடம் ரூ. 18 ஆயிரம் வசூலித்த டாக்சி டிரைவர் கைது

கணவர் 'குரங்கு’ என்று அழைத்ததால் மாடல் அழகி தூக்கிட்டு தற்கொலை

அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா துணை முதல்-மந்திரி ஆகிறார்?

மத்தியபிரதேசம்: கார் மீது லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி

சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் போலீசில் சரண்