மாவட்ட செய்திகள்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 54 பேர் கைது

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

மாநில தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாநில பாது செயலாளர் பழனிமுருகன், பொருளாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். புதிய மின்சார சீரமைப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட தலைவர் கிருபாகரன், மாவட்ட செயலாளர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 54 பேர் கைது செய்யப்பட்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்