மாவட்ட செய்திகள்

ஜெயில்களில் இருந்து பெண் கைதிகள் ‘‘வீடியோ கால்’’ மூலம் குடும்பத்துடன் பேச அனுமதி

ஜெயில்களில் இருந்து, பெண் கைதிகள் ‘‘வீடியோ கால்’’ மூலம் குடும்பத்துடன் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் 13 திறந்தவெளி ஜெயில், 2 பெண்கள் ஜெயில் என மொத்தம் 54 சிறைச்சாலைகள் உள்ளன. இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 28 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மராட்டிய அரசு ஜெயில்களில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகள் வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேசும் வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டது.

இதில் சோதனை முயற்சியாக புனே ஏரவாடா மத்திய சிறைச்சாலையில் கைதிகள் வீடியோ கால் மூலம் குடும்பத்தினரை பார்த்து பேசும் வசதி கொண்டு வரப்பட்டது.

இந்தநிலையில், மராட்டியத்தில் உள்ள பெண்கள், திறந்தவெளி ஜெயில்களில் கைதிகள் வீடியோ கால் மூலம் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேசும் வசதி தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், கைதிகள் 5 நிமிடம் வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேசலாம். இதற்காக அவர்களிடம் இருந்து ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்