இதற்கு பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். சேவாலயா தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி முரளிதரன், ஒன்றிய செயலாளர் புஜ்ஜி முரளிகிருஷ்ணன், திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய குழு துணைத்தலைவர் பர்கத்துல்லா கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பால்வளத்துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான ஆவடி சா.மு. நாசர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தொகையும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு தற்காப்பு உபகரணங்களையும் வழங்கினார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு பயன்படும் இலவச மருத்துவ ஊர்தியை தொடங்கி வைத்து அந்த வாகனத்தை தானே சிறிது தூரம் ஓட்டிச் சென்றார்.