மாவட்ட செய்திகள்

அம்மா உணவகங்களில் 31-ந் தேதி வரை விலையில்லா உணவு வழங்கப்படும்

அம்மா உணவகங்களில் 31-ந் தேதி வரை விலையில்லா உணவு வழங்கப்படும் ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ தகவல்.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர். வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரானா 2-வது அலை பரவுவதை தடுக்க தமிழக அரசு வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்குக்கு உத்தரவிட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தநிலையில் வேலைக்கு செல்லமுடியாமல் தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் பசியினை போக்க வசதியாக தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை விலையில்லாமல் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தஞ்சை திலகர் திடல் அருகே உள்ள அம்மா உணவகத்திலும், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்திலும் காலை, மதியம் மற்றும் இரவு என 3 நேரமும் விலையில்லாமல் உணவு இன்று காலை முதல் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்