மாவட்ட செய்திகள்

அனந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த அத்வானி உள்பட முக்கிய தலைவர்கள் இன்று பெங்களூரு வருகை

அனந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த அத்வானி உள்பட முக்கிய தலைவர்கள் இன்று(செவ்வாய்க்கிழமை) பெங்களூரு வருகிறார்கள்.

தினத்தந்தி

பெங்களூரு,

மத்திய மந்திரி அனந்தகுமாரின் உடலுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) இறுதிச் சடங்கு நடக்கிறது. அவரது உடல் இன்று காலை மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. அங்கு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன் பிறகு அவரது உடல் நேஷனல் கல்லூரி மைதானத்திற்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

அனந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் பிற மாநிலங்களின் முதல்-மந்திரிகள் வருகிறார்கள். பா.ஜனதாவின் மூத்த தலைவர்களும் வருகை தர உள்ளனர்.

இதையடுத்து நேஷனல் கல்லூரி மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று இரவு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு மதியம் 1 மணிக்கு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடக்கிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு