மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினத்தந்தி

திருப்பூர்,

ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் சுசிலா தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் மெரூன்னிஷா, ஒன்றிய செயலாளர் ஜூலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் பாக்கியம், மாவட்ட இணை செயலாளர் சித்ரா, சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் குமார், மாவட்ட செயலாளர் ரங்கராஜ், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மைதிலி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

மத்திய அரசு வழங்கும் ஊதிய உயர்வு ரூ.1500 மற்றும் ரூ.750-ஐ உடனடியாக நிலுவையுடன் வழங்க வேண்டும்.

எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை கவனிக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு பிற துறைகளின் பணிகளை திணிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் ஒன்றிய பொருளாளர் ரஹ்மத்துன்னிசா நன்றி கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்