மாவட்ட செய்திகள்

சனிப்பெயர்ச்சியையொட்டி தஞ்சை மூலைஅனுமாருக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம்

சனிப்பெயர்ச்சியையொட்டி தஞ்சை மூலைஅனுமாருக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சை மேலவீதியில் பிரதாப வீர ஆஞ்சநேயர் என்ற மூலை அனுமார் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது. மூலை அனுமார் வாலில் சனீஸ்வர பகவான் உள்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

ராமாயணத்தில் ராவணனால் சிறைபிடிக்கப்பட்டு பெரும் துன்பத்திற்கு ஆளான நவக்கிரகங்களை தன் பலத்தால் விடுதலையாக்கியவர் அனுமார். இதன்பலனாக தனக்கோ தன் பக்தர்களுக்கோ யாதொரு தீங்கும் செய்யமாட்டோம் என நவக்கிரகங்களிடம் சத்தியபிரமாணம் பெற்றவர். இவரை வழிபடுகின்றவர்களுக்கு பயம் நீங்கி ஆற்றலும், மேன்மையும் பெற்று செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றியை தரக்கூடியவர் மூலைஅனுமார் என்பது ஐதீகம்.

பால் அபிஷேகம்

இத்தகைய புகழ்பெற்ற தஞ்சை மூலைஅனுமார் கோவிலில் சனிப்பெயர்ச்சியையொட்டி நேற்று பிரதாப வீர ஆஞ்சநேயருக்கு 108 லிட்டர் பாலினால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் சனிப்பெயர்ச்சியையொட்டி பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளான மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளை சேர்ந்தவர்கள் மூலை அனுமாரை தரிசனம் செய்ததுடன் சனிதோஷம் நிவர்த்தி காணிக்கையாக ரூ.18-யை உண்டியலில் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

தஞ்சை பெரியகோவில்

தஞ்சை பெரியகோவிலில் உள்ள சனிபகவானுக்கு அதிகாலையில் பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பரிகாரம் செய்யக்கூடிய ராசிக்காரர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இதேபோல் தஞ்சை மேலவீதியில் உள்ள சங்கர நாராயணசாமி கோவிலில் சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. தஞ்சை தெற்குவீதியில் காசி விஸ்வநாதர் கோவில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோவில், மாரியம்மன்கோவில் கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சனிப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கொரோனா வழிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் முக கவசம் அணிந்து பங்கேற்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு