மாவட்ட செய்திகள்

பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மற்றொரு பெண் கைது

பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

கல்லக்குடி,

கல்லக்குடி அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அம்சவள்ளி(வயது 58). ஆட்டுப்பட்டி வைத்து ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு அருகே வசித்து வருபவர் தமிழ்ச்செல்வி (24). இருவருக்கும் இடையே ஆட்டுபட்டியை வைத்து தினமும் வாய்த்தகராறு ஏற்படும். இந்நிலையில் நேற்று காலை ஏற்பட்ட தகராறில் தனது வீட்டில் அலுமினிய பாத்திரத்தில் கொதிக்கும் சமையல் எண்ணெயை அம்சவள்ளி மீது தமிழ்செல்வி ஊற்றியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வியை கைது செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்