மாவட்ட செய்திகள்

சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பு

சென்னை வடக்கு மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் 1-ந்தேதி (இன்று) வரையிலான ஒரு வார காலம், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைப்பிடித்து வருகிறது.

தினத்தந்தி

மண்டல வைப்புநிதி கமிஷனர் சி.அமுதா தலைமையில், அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட அனைவரும் நேர்மையாக இருப்போம் என்பதை வலியுறுத்தி கடந்த மாதம் 26-ந்தேதியன்று உறுதிமொழி எடுத்தனர். சுதந்திர இந்தியா-75: நேர்மையுடன் சுயசார்பு' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் இந்த வருடம் கடைபிடிக்கப்படுகிறது.இந்த வாரத்தில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. வேலை வழங்குவோர், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர், ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய சேவைகள், குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை இ-சேவை, ஒருங்கிணைந்த கணக்கு எண் (யூ.ஏ.என்.) உள்பட இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம். அவர்களுடைய சேவைகள், கோரிக்கைகள் எலக்ட்ரானிக் முறையில் இணையதளம் மூலமாக தீர்வு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் சி.அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்