திருப்பத்தூர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, திருப்பத்தூர் நகர வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருப்பத்தூர் நகராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் செட்டி தெருவில் உள்ள ஏ.ஜி.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு திருப்பத்தூர் மாவட்ட பொருளாளர் ஏ.செந்தில் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.பி.எஸ். மாதேஸ்வரன் வரவேற்றார்.
ஆர்.ஜி..வெங்கடாஜலம், வி.மகாலிங்கம், பி.என்.எஸ்.சரவணன், ஏ.தேவராஜன், டி.எழிலரசன், டி.சிவபெருமான், ஆ.பிரபாகரன், டி.டி. சக்கரவர்த்தி, ராஜாராணி தாமோதரன், எஸ்.சூரியகுமார், டி.என்.டி.கே. சுபாஷ், எம்.டி.எஸ்.மகாதேவன், வி.கே.ஆனந்த், ஜி.பாக்கியராஜ், கே. எழிலரசன், பி.முருகேசன், ஆ.சுந்தர், எஸ்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் மண்டல தலைவர் ஆம்பூர் சி. கிருஷ்ணன், திருப்பத்தூர் நகர தி.மு.க. செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு நகராட்சி தலைவர் வி.சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா, நகராட்சி கவுன்சிலர்களை, பாராட்டி, முத்து மாலை அணிவித்து, பரிசுகளை வழங்கினர்கள்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரன், திருப்பத்தூர் நகர அனைத்து வணிகர் சங்கம், வர்த்தக சங்கம், திருப்பத்தூர் நகை மற்றும் அடகு வியாபாரிகள் சங்கம், திருப்பத்தூர் எலக்ட்ரிகல்ஸ், மிஷினரி விற்பனையாளர்கள் சங்கம், பாத்திர வியாபாரிகள் சங்கம், மருந்து வியாபாரிகள் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நெல் அரிசி மண்டி வியாபாரிகள் சங்கம், மாவட்ட அச்சக உரிமையாளர்கள் சங்கம், மாவட்ட ஆப்செட் அச்சக உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்க தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கவுன்சிலர்களுக்கு மாலை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள். முடிவில் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.