மாவட்ட செய்திகள்

கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? புதுச்சேரி மதுக்கடைகளில் கலால்துறை அதிகாரிகள் ஆய்வு

கொரோனா ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து புதுவையில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் சிறப்பு கலால் வரி விதிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள விலைக்கு நிகராக விற்கப்படுகிறது.

தினத்தந்தி

மேலும் நாள்தோறும் விற்பனை, இருப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டும். மதுபாட்டில்களில் விலைகள் குறித்த விவரங்களும் இருக்கவேண்டும் என்று கலால் துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்தநிலையில் கலால்துறை ஆணையர் அபிஜித் விஜய் சவுத்ரி, துணை ஆணையர் சுதாகர் ஆகியோர் நகர பகுதியில் உள்ள மதுக்கடைகளில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பதிவேடுகளில் விற்பனை, இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தனர்.

மதுக்கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்தும் பார்வையிட் டனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறிதளவும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என கடைக்காரர்களிடம் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்