மாவட்ட செய்திகள்

வேலாயுதம்பாளையத்தில் ஆயுதப்படை பெண் போலீஸ் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

வேலாயுதம்பாளையத்தில் ஆயுதப்படை பெண் போலீஸ் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் வள்ளூவர்நகர் காவிரிதெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 36). இவர் காகிதஆலையில் (டி.என்.பி.எல்.) தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி நதியா (31). இவர் கரூர் ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் சாமிநாதன் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சொட்டையூர் சுடுகாடு வழியாக சென்றுள்ளார்.

இந்தநிலையில் திடீரென அப்பகுதியில் ஒரு வேப்பமரத்தில் சாமிநாதன் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட சொக்கன்காடு பகுதியை சுப்பிரமணி என்பவர் சாமிநாதனின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாமிநாதனை ஆம்புலன்சு மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாமிநாதனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சாமிநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சாமிநாதனின் மனைவி நதியா வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாமிநாதன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படை பெண் போலீஸ் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்