மாவட்ட செய்திகள்

பேரளத்தில் இருந்து திருப்பூருக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

பேரளத்தில் இருந்து திருப்பூருக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

தினத்தந்தி

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லை பொதுவினியோக திட்டத்தில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் வெளிமாவட்டங்களுக்கும் நெல் மூட்டைகள் சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

1,000 டன் நெல்

அதன்படி பேரளத்தில் இருந்து திருப்பூருக்கு 1,000 டன் பொதுரக நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.இதைமுன்னிட்டு நன்னிலம், குடவாசல் பகுதிகளில் உள்ள நேரடி கொள் முதல் நிலையங்களில் இருந்து லாரிகளில் நெல் மூட்டைகள் பேரளம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதை தொடர்ந்து லாரிகளில் இருந்த நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் சரக்கு ரெயில் நெல்மூட்டைகளுடன் திருப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்