மாவட்ட செய்திகள்

முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது

முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி

ஆவடியை அடுத்த பொத்தூர் மணிகண்டபுரம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது 36). அம்பத்தூர் எஸ்டேட்டில் சொந்தமாக சிறிய அளவில் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கீதா (35). இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் குமார், தனது மனைவி கீதாவுக்கு தெரியாமல் உறவினர் மகளை 2-வதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து அறிந்த கீதா, இதுபற்றி கணவரிடம் கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குமார், கீதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கீதா அளித்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்