மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சம் மதுபாட்டில்கள்-எரிசாராயம் பறிமுதல் 4 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு

கும்பகோணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெளிமாநில மதுபாட்டில்கள், எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சாராய வியாபாரியை தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மணஞ்சேரி பகுதியில் வெளிமாநில மதுபானங்கள் விற்பனை செய்வதாக கும்பகோணம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை மணஞ்சேரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மாணிக்க விநாயகர் நாச்சியார் கோவில் அருகில் பெரியவன் என்கிற முருகன் என்பவரது வீட்டு கொல்லைப்புறத்தில் 180 மி.லி. அளவுள்ள 48 பாட்டில்கள் கொண்ட 81 பெட்டிகளில் 3888 மதுபாட்டில்களும், 35 லிட்டர் அளவு கொண்ட 55 கேன்களில் 1925 லிட்டர் எரிசாராயமும் வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

இதையடுத்து போலீசார் மதுபாட்டில்கள் மற்றும் இவைகளை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக முருகன்(வயது 60), ஆனந்த் (27), மணிகண்டன்(21), பாரதி(28) ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு முருகன் என்கிற பெரியவன் மற்றும் அருண்பாண்டி ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்