மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் போதை பவுடர் கடத்தல் ஆசாமி கைது

சென்னை விமான நிலையத்தில் போதை பவுடர் கடத்தல் ஆசாமி கைது.

தினத்தந்தி

ஆலந்தூர்,

திருப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப இருந்த பார்சலில் 56 நகை பெட்டிகள் இருந்தது. இந்த பெட்டிகளில் 3 கிலோ போதை பொருட்கள் இருந்ததை மதுரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த பார்சலை அனுப்பிய வாலிபரை கைது செய்தனர். அப்போது நகை பெட்டிகளில் போதை பவுடரை மறைத்து வைத்து கடத்த முயன்ற ஆசாமி சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னையில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏற வந்த ஆசாமியை சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்கள் பிண்ணனியில் உள்ளவர்கள் குறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்