மாவட்ட செய்திகள்

கத்திமுனையில் வாலிபரிடம் பணம் பறித்த அண்ணன், தம்பி கைது

கும்மிடிப்பூண்டி அருகே கத்திமுனையில் வாலிபரிடம் பணம் பறித்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த காயலார்மேடு கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 22). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர் நேற்று எளாவூரில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எளாவூர் பஜாரையொட்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சரத்குமாரை கத்தி முனையில் வழிமறித்து அவரிடம் இருந்து ரூ.500-ஐ பறித்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், 2 பேரையும் தனது மோட்டார் சைக்கிளில் சென்று மடக்கி பிடித்தார். விசாரணையில் அவர்கள், எளாவூரை அடுத்த தலையாரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (26), அவரது தம்பி டால் ஆனந்தன் (24) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன், தம்பி 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் கும்மிடிப்பூண்டி, சிப்காட் மற்றும் ஆரம்பாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT