மணவாளக்குறிச்சி,
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்றாகும். கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப் படுகிறது.
இங்கு மாசிக்கொடை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும். அப்போது நடக்கும் மகாபூஜை எனப்படும் வலிய படுக்கை பூஜை முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. இந்த பூஜை மாசி திருவிழாவின் 6-ம் நாளிலும், பங்குனி மீன பரணிக் கொடையன்றும் மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையிலும் என ஆண்டுக்கு 3 முறை நடக்கும்.