மாவட்ட செய்திகள்

பவுஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு ஆய்வு கூட்டம்

லத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று கொரோனா தொற்று தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட லத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று கொரோனா தொற்று தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பனையூர் பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். செய்யூர் தாசில்தார் ராஜேந்திரன், லத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் கே.எஸ்.ராமச்சந்திரன், முகையூர் பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆதவன், மாநில நிர்வாகி வக்கீல் பார்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் முறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பவுஞ்சூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் பயன்பாட்டுக்காக ஒரு ஆக்சிஜன் செறிவூட்டியை வட்டார தலைமை மருத்துவ அலுவலர் கங்காதரனிடம் எம்.எல்.ஏ, பனையூர் பாபு வழங்கினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்