மாவட்ட செய்திகள்

வசாய் ஜெயின் கோவிலில் 11 சிலைகள், உண்டியல் திருடிய 3 பேருக்கு வலைவீச்சு

வசாய் ஜெயின் கோவிலில் இருந்த 11 சிலைகள், உண்டியலை திருடி சென்ற 3 பேர் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வசாய்,

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு சாத்திவிலி பகுதியில் சிந்தாமனி பர்ஷவநாத் திகம்பர் என்ற ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று புத்தாண்டையொட்டி மதகுருமார்கள் பிராத்தனை செய்ய கோவிலுக்கு உள்ளே சென்றனர்.

அப்போது அங்கிருந்த 11 சாமி சிலைகள் மற்றும் உண்டியல் காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இது பற்றி போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் படி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு நடத்தினர். இதில் 3 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த 6 அடி சுவர் மீது ஏறி குதித்து உள்ளனர். பின்னர் கோவில் உள்ளே நுழைந்த அவர்கள் சிலைகளை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிலைகளை திருடி சென்ற 3 பேரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் 16-ந்தேதி விராரில் உள்ள ஜெயின் கோவிலில் இருந்த 16 சிலைகளை திருடிய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்