மாவட்ட செய்திகள்

தானேயில் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற கொள்ளையர்கள் உள்ளே இருந்தது ரூ.6 ஆயிரம் மட்டுமே

தானே மாவட்டத்தில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் இருந்து எந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கிச்சென்றனர். இருப்பினும் அதில் வெறும் ரூ. 6 ஆயிரம் மட்டுமே இருந்தது தெரியவந்தது.

தினத்தந்தி

தானே,

தானே மாவட்டம் உசாட்னே கிராமம் அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை நேரத்தில் இந்த ஏ.டி.எம். மையத்தில் நுழைத்த மர்ம நபர்கள், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு, ஏ.டி.எம். எந்திரத்தை பணத்துடன் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

காணாமல் போன எந்திரத்தில் ரூ.6 ஆயிரம் மட்டும் இருந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை திருடிச்சென்ற மர்மஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்