கூத்தாநல்லூர்,
கூத்தாநல்லூர் ஆஸ்பத்திரி ரோட்டுத்தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவருடைய மனைவி அருமைக்கண்ணு (வயது 50). சம்பவத்தன்று இவர்களது மகளை அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கிண்டல் செய்துள்ளார். அதுபற்றி கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களிடம் அருமைக்கண்ணு கூறியுள்ளார்.
இதனையறிந்த சந்தோஷ் மற்றும் அவருடைய தந்தை சேகர், தம்பி சார்கேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து அருமைக்கண்ணு வீட்டுக்கு சென்று கிராம முக்கியஸ்தர்களிடம் எதற்காக சொன்னாய் என்று கேட்டு அவரை தாக்கியுள்ளனர். அப்போது தடுக்க வந்த பக்கத்து வீட்டு மூதாட்டி சாவித்திரி (70) என்பவரையும் தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
தந்தை-மகன்களுக்கு வலைவீச்சு
இதில் படுகாயம் அடைந்த அருமைக்கண்ணு, சாவித்திரி இருவரும் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர், அவருடைய மகன்கள் சந்தோஷ், சார்கேஷ் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.