தர்மபுரி,
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக தங்களது கைகளை சுத்தப்படுத்தும் நோக்கத்துடன் சென்சார் மூலம் இயங்கும் தானியங்கி கிருமிநாசினி திரவம் வழங்கும் எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த எந்திரத்தின் முன்பு கைகளை நீட்டினால் போதும் அதில் உள்ள சென்சார் மூலம் எதையும் தொடாமலேயே கைகளில் கிருமிநாசினி திரவத்தை வழங்கும் வகையில் இந்த எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி ஆணையாளர் சித்ரா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இதே போன்று டவுன் பஸ் நிலையம் மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்திலும் இந்த தானியங்கி கிருமிநாசினி எந்திரம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த எந்திரம் பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.