மாவட்ட செய்திகள்

விளையாட்டு விடுதியில் சேர்க்கைக்கான இறகுப்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு

விளையாட்டு விடுதியில் சேர்க்கைக்கான இறகுப்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யும் போட்டி நடந்தது.

தர்மபுரி:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி பிரிவு சார்பில் 2022- 2023-ம் ஆண்டில் விளையாட்டு விடுதியில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு மாநில அளவிலான இறகுப்பந்து தேர்வு போட்டிகள் தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த தேர்வு போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்ச்சி பெற்ற 75 வீரர்கள் மற்றும் 15 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வு போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்-வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் இறகுப்பந்து விளையாட்டு விடுதியில் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர். இந்த விளையாட்டு விடுதியில் சத்தான உணவு, தங்குமிடம் ஆகிய வசதிகளுடன் சிறப்பான விளையாட்டு பயிற்சியும் தமிழக அரசால் வழங்கப்படும் என விளையாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை