மாவட்ட செய்திகள்

கிராமப்புறங்களில் அரசு நடத்தும் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் பாலாஜி பேட்டி

கன்னியாகுமரி வந்த பிரபல கிரிக்கெட் வீரர் பாலாஜி, கிராமப்புறங்களில் அரசு நடத்தும் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்கவேண்டும் என்று கூறினார்.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

பிரபல கிரிக்கெட் வீரர் பாலாஜி நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வந்தார். பின்னர், அவர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை காண்பதற்காக படகுத்துறைக்கு வந்தார்.

பின்னர் அவர், சுற்றுலா பயணிகளுடன் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை ஆகியவற்றை பார்த்து ரசித்தார். அப்போது அங்கு இருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது செல்போனில் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

பின்னர், கரை திரும்பிய அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளையும் பள்ளிமுதல் கல்லூரி வரையிலான பாடத்திட்டங்களில் சேர்க்கவேண்டும். கிராமப்புறங்களில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை மத்திய, மாநில அரசு ஊக்குவிக்கவேண்டும். மேலும், கிராமப்புறங்களில் அரசு நடத்தும் விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட்டையும் சேர்த்து நடத்தவேண்டும்.

இவ்வாறு அவர்கூறினார். அதைதொடர்ந்து, அவர் சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு சென்று சூரியன் மறையும் காட்சியை கண்டு ரசித்தார். பின்னர், அவர் நெல்லைக்கு புறப்பட்டு சென்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்