மாவட்ட செய்திகள்

குன்றத்தூர் ஒன்றியத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி

குன்றத்தூர் ஒன்றியத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 354 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தங்களுடைய வார்டு முன்னேற்றமடைய தேவையான பணிகள், கடமைகள், பொறுப்புகள், உரிமைகள் குறித்து அறிந்துகொள்ள அடிப்படை பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் தலைமையில் படப்பையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மேலாளர் எழுமலை, பயிற்சி பயிற்றுனர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாளொன்றுக்கு 60 வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வருகிற சனிக்கிழமை வரை நடைபெறும்.

இப் பயிற்சியில் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு