மாவட்ட செய்திகள்

கடம்பூர் மலைப்பாதையில் சண்டை போட்ட கரடிகள் வாகன ஓட்டிகள் அச்சம்

கடம்பூர் மலைப் பாதையில் கரடிகள் சண்டை போட்டன. அதைப்பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

தினத்தந்தி

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் சத்தியமங்கலம் மற்றும் கெம்பநாயக் கன்பாளையத் துக்கு பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வருவது வழக்கம்.

கடம்பூர் செல்லவேண்டு மானால், கெம்பநாய க்கன்பாளையத்திலிருந்து கடம்பூர் வரை 15 கிலோமீட்டர் தூரத்துக்கு அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைப்பாதை வழியாக பயணிக்க வேண்டும்.

இந்த நிலையில் நேற்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூருக்கு சரக்கு வேன் ஒன்று சென்றது. மல்லியம்மன் கோவில் அருகே சென்றபோது சாலையின் நடுவே 2 கரடிகள் உறுமியபடி பயங்கரமாக சண்டை போட்டுக்கொண்டு இருந்தன. அதைப்பார்த்து டிரைவர் அதிர்ச்சியடைந்தார்.

வாகனம் நிற்பதை பார்த்தும் கரடிகள் அச்சமில்லாமல் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டு இருந்தன. சிறிது நேரத்தில் வேனுக்கு பின்னால் வேறு சில வாகனங்கள் வந்தன. அனைத்து வாகனங்களும் செல்லாமல் அப்படியே நின்றன.

சிறிது நேரம் கழித்த பின்னர் அனைத்து வாகன ஓட்டிகளும் சத்தமாக காற்று ஒலிப்பானை (ஏர்ஹாரன்) ஒலித்தனர். அதனால் சண்டை போட்டுக்கொண்டு இருந்த 2 கரடிகளும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன.

பட்டப்பகலில் கடம்பூர் மலைப்பாதையில் 2 கரடிகள் சண்டை போட்டுக்கொண்டு இருந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்