மாவட்ட செய்திகள்

கடன் பிரச்சினையால் எலி மருந்தை தின்று சலூன் கடைக்காரர் தற்கொலை - போலீசார் விசாரணை

கடன் பிரச்சினையால் எலிமருந்தை தின்று சலூன் கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளப்பெரம்பூர்,

வல்லம் அருகே உள்ள குருங்குளத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது45). இவருடைய மனைவி நிர்மலா (40). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அசோக்குமார் அய்யம்பேட்டை அருகே உள்ள மேல வழுத்தூரில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இந்தநிலையில் அசோக்குமாருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாகவும், கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் குருங்குளத்தில் தனது உறவினர் வீட்டுக்கு சென்று உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அப்போது தான் எலிமருந்தை தின்றதாக அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அசோக்குமாரை அவருடைய உறவினர்கள் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அசோக்குமாரின் மனைவி நிர்மலா வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்