மாவட்ட செய்திகள்

குண்டலப்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமிபூஜை

குண்டலப்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமிபூஜை நடந்தது.

தினத்தந்தி

தர்மபுரி:

தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சி குண்டலப்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பானு பூமணி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரவணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் தம்பி ஜெய்சங்கர், ஊராட்சி மன்ற துணை தலைவர் தேவி அருள் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் இடும்பன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் பழனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரை, நிர்வாகி ரவி மற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு