மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிகளில் மாணவ–மாணவிகளின் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு

பெரம்பலூர் அரசு பள்ளிகளில் மாணவ–மாணவிகளின் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்வது குறித்து சமூக நல ஆணையர் அமுதவள்ளி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவமாணவிகளின் பள்ளி வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படுவதை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலையில், சமூக நல ஆணையர் அமுதவள்ளி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பயோமெட்ரிக் முறையில் மாணவமாணவிகள் தங்கள் வருகையை பதிவு செய்யும் முறைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து சமூக நல ஆணையர் அமுதவள்ளி குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவமாணவிகளுக்காக தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவின் தரம் குறித்தும், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற உணவுகள் சமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் மதிய உணவில் சேர்த்து வழங்கப்படும் முட்டையினையும் பார்வையிட்டார்.


பின்னர் செஞ்சேரியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தினை ஆய்வு மேற்கொண்ட சமூக நல ஆணையர் அமுதவள்ளி, மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மற்றும் உணவுகள் குறித்தும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் முன்பருவ கல்வி முறைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளிடம் கேட்டறிந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் 2 கல்லூரி விடுதிகளிலும், 29 பள்ளி விடுதிகளிலும், பயோமெட்ரிக் முறையில் மாணவமாணவிகளின் வருகை பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழிதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கலைச்செல்வி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையின் திட்ட அலுவலர் பூங்கொடி, சமூக நலத் துறை அலுவலர் தமுமுன்னிசா, தாசில்தார் பாரதிவளவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்