கரூர் 
மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

கரூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

கரூர்,

தி.மு.க.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மத்திய மாநகர பொறுப்பாளர் எஸ்.பி.கனகராஜ் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் மத்திய கிழக்கு மாநகர பொறுப்பாளர் கோல்டுஸ்பாட் ராஜா, தெற்கு மாநகர பொறுப்பாளர் சுப்பிரமணியன், மத்திய மேற்கு மாநகர பொறுப்பாளர் அன்பரசன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பட்டியல் இன விடுதலை பேரவை

கரூர் பஸ் நிலையம் அருகே கோவை ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு பட்டியல் இன விடுதலை பேரவை நிறுவன தலைவர் தலித் ஆனந்தராஜ் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.இதில், இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், மகளிர் அணி செயலாளர் கலா, பொருளாளர் தனபாலன், க.பரமத்தி ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புரட்சி பாரதம்

இதேபோன்று கரூர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லமுத்து தலைமையில் அக்கட்சியினர் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

தாந்தோணிமலை பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் இளங்கோ தலைமையில் அக்கட்சியினர் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் கரூர் லைட்ஹவுசில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுடர் வளவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சமத்துவ நாள் உறுதிமொழி

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு கலெக்டர் பிரபுசங்கர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தோகைமலை

தோகைமலை பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமையில், அம்பேத்கர் உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. இதேபோல் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளை செயலாளர்கள் தலைமையில் அம்பேத்கர் பிறந்நாள் விழா கொண்டாட்டப்பட்டது. இதேபோல ஆதித்தமிழர் பேரவை கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், ஓவியருமான குமரேசன் தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நச்சலூர்

குளித்தலை காந்தி சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு கரூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் குளித்தலை முன்னாள் நகர்மன்ற தலைவர் பல்லவிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதைபோல குளித்தலை சுங்ககேட், கோட்டைமேடு, வலையப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நொய்யல்

நொய்யல், குறுக்குச்சாலை, அண்ணாநகர், சேமங்கி செல்வநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்