மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் அருகே நிர்வாகிகள் கைது செய்ததை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார். இதில் துணை தலைவர்கள் தண்டபாணி, மல்லிகா, செயலாளர்கள் கார்த்திக் வினோத், பாலமுருகன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்பேது கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை விடுவிக்க வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.

இதேபோல் பழனி பஸ்நிலையம் பகுதியில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர தலைவர் ராமசந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் உள்பட நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்தும், பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும் கோஷமிட்டனர்.

பின்னர் திடீரென அவர்கள் பழனி-திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து, அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்பு இரவு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை