மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

சூரமங்கலம்,

சேலம் நரசோதிப்பட்டி கே.எஸ்.வி. நகரை சேர்ந்தவர் மனோகரன்(வயது 48). இவர் அழகாபுரம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மனோகரன் தனது மனைவியுடன் கடைக்கு சென்றார். பின்னர் அவர்கள் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றனர்.

அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மேலும் அதில் இருந்த 9 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், வீட்டில் ஆட்கள் இல்லாததை மர்ம ஆசாமிகள் நோட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

மேலும் இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்