மாவட்ட செய்திகள்

ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு போனது தெரியவந்தது.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33), இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து மணிகண்டன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்