மாவட்ட செய்திகள்

ரம்ஜான் பண்டிகை சேலம் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையையொட்டி சேலம் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

சேலம்,

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ரம்ஜான் பண்டிகையை நேற்று முஸ்லிம்கள் கொண்டாடினார்கள். அதையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சென்று பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

சேலம் டவுன் ஜாமியா பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தொழுகையில் முத்தவல்லி அன்வர், ஜாமியா மஜித் கமிட்டி நிர்வாகிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். பள்ளிவாசலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பள்ளிவாசலுக்கு வெளியேயும் முஸ்லிம்கள் திரண்டு வந்து தொழுகையில் ஈடுபட்டனர்.

தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். சேலம் சூரமங்கலம் சுப்பிரமணி நகர் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். சிறுவர், சிறுமிகள் புத்தாடை அணிந்து இந்த தொழுகையில் ஈடுபட்டனர்.

இதேபோல் சேலம் கோட்டை பகுதி, சன்னியாசி குண்டு, முள்ளுவாடி கேட், செவ்வாய்பேட்டை, 4 ரோடு, ஏற்காடு அடிவாரம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, சேலம் புதிய பஸ்நிலையம் என மாநகரில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்கள் பலர் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலமும், சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்றவற்றிலும் ரம்ஜான் வாழ்த்துகளை பதிவு செய்தனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்கள் அனைத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் சேலம் மத்திய சிறையில் நோன்பு இருந்த முஸ்லிம்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்